Sunday, February 19, 2012

பெயர் தோன்றிய விதம்

ஆனியன்: கிரேக்க மொழியில் "ஆனியோ' என்றால் மிகப் பெரிய முத்து என்று பொருள். ஆனியோ தான் ஆங்கிலத்தில் "ஆனியன்' என்று ஆனது.
கொய்யா: "குயாயயே' என்ற மரத்தின் பழம் அமெரிக்கத் தீவுகளிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதுவே கொய்யாப்
பழமானது.
வெற்றிலை: மலேசியாவில்தான் வெற்றிலை முதன்முதலில் பயிர் செய்யப்பட்டது. வேற்று நாட்டு இலை என்பதால் அதை "வேற்று இலை' என்றார்கள். நாளடைவில் அதுவே வெற்றிலை ஆகியது.
வைரஸ்: "வைரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். இதிலிருந்துதான் நோயை உருவாக்கும் நச்சுக்கிருமிக்கு வைரஸ் என்ற பெயர் வந்தது.
அமீபா: கிரேக்க மொழியில் "அமீபா' என்றால் உருமாற்றம் என்று பொருள். அமீபாவுக்கு நிலையான, சீரான உருவம் இல்லை. அதன் உருவம் மாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அமீபா என்று பெயரிடப்பட்டது.
ஜிராஃபி: அரேபிய மொழியில் "ஜிராபோ' என்றால் நீண்ட கழுத்து என்று பொருள். இந்தச் சொல்லின் அடிப்படையில்தான் நீண்ட கழுத்தையுடைய ஒட்டகச் சிவிங்கியை "ஜிராஃபி' என்கிறோம்.
எஸ்கிமோ: எஸ்கிமோ என்ற சொல்லுக்கு மாமிசத்தை உண்பவர்கள் என்று பொருள். எஸ்கிமோக்கள் பச்சை மாமிசத்தையும் உண்ணக்கூடியவர்கள் என்பதால் இந்தப் பெயர்.
இமயமலை: "இமம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு பனி என்று பொருள். எப்போதும் இம்மலை பனி மூடிக் காட்சியளிப்பதால் இமயமலை என்ற பெயர் ஏற்பட்டது.
மீட்டர்: "மீட்டர்' என்ற சொல் பிரெஞ்சு மொழிச் சொல்லான "மீட்' என்பதிலிருந்து வந்ததாகும். மீட் என்றால் அளந்து எல்லையிடுதல் என்று பொருளாகும்.
ஏக்கர்: லத்தீன் மொழிச் சொல்லான "ஏகர்' என்பதற்கு ஒரு பகுதி நிலம் என்று பொருள். இந்த அடிப்படையிலிருந்துதான் ஏக்கர் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது.
பின் (குண்டூசி): லத்தீன் மொழியில் "ஸ்பின்னா' என்றால் கூரிய முனையுள்ளது என்று பொருள். இந்தச் சொல்லிலிருந்துதான் பின் என்ற சொல் உருவானது.

No comments:

Post a Comment