Saturday, February 18, 2012

மூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய மானுவல் சிகிச்சை

இன்றைய காலகட்டத்தில் உடலில் உண்டாகும் வலிக்கான காரணத்தைக் கண்டறிய நேரமில்லாமல் வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி நாம் தாற்காலிகத் தீர்வைத் தேடுகிறோம்.
இதனால் நிரந்தர வலி வர நாமே காரணமாகின்றோம். மூட்டு எலும்புத் தேய்மானம், தசைநார்கள் பலவீனம் வருவதற்கு மனச் சோர்வு, உடல் சோர்வு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மூட்டுத் தேய்மானம் காரணமாக முதுகுத் தண்டின் நடுவில் உள்ள வட்ட வடிவமான ஜவ்வு வெளியே வந்தும், தசை நார்கள் கிழிந்தும் தீராத வலி ஏற்படுகிறது. இதற்கு செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகூட நிரந்தரமான தீர்வல்ல என்கிறார்கள்.
ஆனால் அயல்நாடுகளில் பிரபலமாக உள்ள "மானுவல் தெரப்பி' எனும் சிகிச்சையை எளிதாக செய்து கொள்ளலாம். வெறும் கைகளின் துணைகொண்டு தீர்வு காணமுடியும்.
எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் வலிக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து வலுவிழந்த தசை நார்களை வலுப்படுத்ததவும், வெளியே வந்துவட்ட ஜவ்வை அதன் சாதாரண நிலைக்குக் கொண்டு சேர்க்கவும், எங்கள் கைகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் முறைப்படுத்தி சிகிச்சை செய்யப்படுகிறது.
நோயாளிகள் தாங்களே செய்து கொள்ளுமாறு, சில எளிய பயிற்சிகளும் உள்ளன. நோயாளிகளின் வலியைப் பொருத்தே, சிகிச்சையின் நேரமும், கால அவகாசமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
"மானுவல் தெரப்பி' சிகிச்சை முறை பிசியோதெரப்பி சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டது. எந்தவித மருந்துகளையும் கொடுப்பதில்லை. எளிமையான மிகக் குறைந்த செலவிலான இந்த சிகிச்சை முறையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு,
உயர் ரத்த அழுத்த நோய்-சர்க்கரை நோய் போன்ற நோய்களிலிருந்து குணம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு...
டாக்டர் வேம்பன் சிவகுமார்,
"ஸ்பைன் அண்ட் பெயின் கேர் கிளினிக்',
சென்னை.
செல்பேசி: 9840303156, 9600190001
(Courtesy Dinamani Tamil Daily magazine dated 19/02/2012)

No comments:

Post a Comment