தாரா பலன் என்னும் நக்ஷ்த்திர பலன்கள்:
ஜோதிடத்தில் சந்திரன் ஒரு ராசியை கடக்க 2.25 நாட்கள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் வீதம் சந்திரன் ஒரு பாதத்தை கடந்து கொண்டே இருக்கின்றார்.
சந்திரன், கோச்சார ரீதியாக தனது பலன்களைதான் அன்று செல்லும் தாரை மூலமாக வழங்கி கொண்டு இருக்கின்றார். சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் என்று பொருள்படும்.
நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவரவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப சந்திரனின் நிலை சாதகமாக உள்ளதா? அல்லது பாதகமாக உள்ளதா? என்பதை தாராபலன் மூலமாக தெரிந்துக்கொள்ள முடியும்.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது வருகின்ற 1,2,3,4,5,6,7,8,9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.
தாரைகளின் பெயர்களும், பலன்களும் :
1. ஜென்மதாரை - மனக்குழப்பத்தை தரும்.
2. சம்பத்து தாரை - தனவரவு, நற்காரியங்கள் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.
3. விபத்து தாரை - தவிர்க்க வேண்டிய நாள்.
4. சேமத்தாரை - நன்மை தரும்.
5. பிரத்தயக்கு தாரை - சிக்கல்கள் தரும். மனக்குழப்பம், வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
6. சாதகதாரை - புதிய முயற்சி மற்றும் செயல்களுக்கு சாதகமாக அமையும்.
7. வதைதாரை - துன்பங்களை தரும்.
8. மைத்திரதாரை - தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.
9. பரம மைத்திரதாரை - அனைத்து சுபச்செயல்களுக்கும் உகந்த நாட்கள் ஆகும்.
சுபகாரியங்களை செய்யும் முன் நாள் பார்க்கும் போது நட்சத்திர தாரையும் பார்த்து செய்தல் உத்தமம் ஆகும்.
வேலைக்காக செல்லும் போதும், புதிய பொருட்களை வாங்கும் போதும்( வண்டி, வீடு, நிலம் போன்ற ) தொழில் துவங்குவது போன்ற காரியங்களுக்கு பார்க்க வேண்டும்.
உங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்து (ஜாதகரின் நட்சத்திரம் அஸ்வினி, அன்றைய நட்சத்திரம் பூரம் என்றால் 11÷9 =2 மீதம்.
இதில் மீதம் 0,2,4,6,8 வந்தால் உத்தமம், 1,3,5,7 வந்தால் அதமம்
1 வந்தால் - ஜென்மதாரை - உடல் நலிவு, விரையம்.
3 வந்தால் - விபத்தாரை - வாகன விபத்து, விரையம்.
5 வந்தால் - பிரத்யகதாரை - எல்லாவற்றிலும் தடை.
7 வந்தால் - வததாரை - அழிவு, பணகஷ்டம்.
0 வந்தால் - பரமமைதாரை - லாபம்.
2 வந்தால் - சம்பத்துதாரை - அதிர்ஷ்டம் ( தொழில் தொடங்கினால் விருத்தி)
4 வந்தால் - ஷேமதாரை - தன விருத்தி, செழிப்பு.
6 வந்தால் - சாதகதாரை - பிறர் உதவி கிடைக்கும்.
8 வந்தால் - மைத்ரதாரை - சொத்து, சுகம், மகிழ்ச்சி கிடைக்கும்.
இதில் ஒற்றைபடை யில் வந்தால் செய்யகூடாது,
தவிர்க்க முடியாமல் வந்தால் பரிகாரம்.
1 வந்தால் வாழைக்காய் தானம்.
3 வந்தால் பழம் ( ஏதேனும்) தானம்.
5 வந்தால் உப்பு தானம்.
7 வந்தால் எள் தானம்.
செய்த பின் அந்த காரியங்களை செய்யலாம்.
No comments:
Post a Comment