Monday, September 21, 2020
தாரா பலன் என்னும் நக்ஷ்த்திர பலன்கள்:
ஜோதிடத்தில் சந்திரன் ஒரு ராசியை கடக்க 2.25 நாட்கள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் வீதம் சந்திரன் ஒரு பாதத்தை கடந்து கொண்டே இருக்கின்றார்.
சந்திரன், கோச்சார ரீதியாக தனது பலன்களைதான் அன்று செல்லும் தாரை மூலமாக வழங்கி கொண்டு இருக்கின்றார். சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் என்று பொருள்படும்.
நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவரவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப சந்திரனின் நிலை சாதகமாக உள்ளதா? அல்லது பாதகமாக உள்ளதா? என்பதை தாராபலன் மூலமாக தெரிந்துக்கொள்ள முடியும்.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது வருகின்ற 1,2,3,4,5,6,7,8,9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.
தாரைகளின் பெயர்களும், பலன்களும் :
1. ஜென்மதாரை - மனக்குழப்பத்தை தரும்.
2. சம்பத்து தாரை - தனவரவு, நற்காரியங்கள் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.
3. விபத்து தாரை - தவிர்க்க வேண்டிய நாள்.
4. சேமத்தாரை - நன்மை தரும்.
5. பிரத்தயக்கு தாரை - சிக்கல்கள் தரும். மனக்குழப்பம், வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
6. சாதகதாரை - புதிய முயற்சி மற்றும் செயல்களுக்கு சாதகமாக அமையும்.
7. வதைதாரை - துன்பங்களை தரும்.
8. மைத்திரதாரை - தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.
9. பரம மைத்திரதாரை - அனைத்து சுபச்செயல்களுக்கும் உகந்த நாட்கள் ஆகும்.
சுபகாரியங்களை செய்யும் முன் நாள் பார்க்கும் போது நட்சத்திர தாரையும் பார்த்து செய்தல் உத்தமம் ஆகும்.
வேலைக்காக செல்லும் போதும், புதிய பொருட்களை வாங்கும் போதும்( வண்டி, வீடு, நிலம் போன்ற ) தொழில் துவங்குவது போன்ற காரியங்களுக்கு பார்க்க வேண்டும்.
உங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்து (ஜாதகரின் நட்சத்திரம் அஸ்வினி, அன்றைய நட்சத்திரம் பூரம் என்றால் 11÷9 =2 மீதம்.
இதில் மீதம் 0,2,4,6,8 வந்தால் உத்தமம், 1,3,5,7 வந்தால் அதமம்
1 வந்தால் - ஜென்மதாரை - உடல் நலிவு, விரையம்.
3 வந்தால் - விபத்தாரை - வாகன விபத்து, விரையம்.
5 வந்தால் - பிரத்யகதாரை - எல்லாவற்றிலும் தடை.
7 வந்தால் - வததாரை - அழிவு, பணகஷ்டம்.
0 வந்தால் - பரமமைதாரை - லாபம்.
2 வந்தால் - சம்பத்துதாரை - அதிர்ஷ்டம் ( தொழில் தொடங்கினால் விருத்தி)
4 வந்தால் - ஷேமதாரை - தன விருத்தி, செழிப்பு.
6 வந்தால் - சாதகதாரை - பிறர் உதவி கிடைக்கும்.
8 வந்தால் - மைத்ரதாரை - சொத்து, சுகம், மகிழ்ச்சி கிடைக்கும்.
இதில் ஒற்றைபடை யில் வந்தால் செய்யகூடாது,
தவிர்க்க முடியாமல் வந்தால் பரிகாரம்.
1 வந்தால் வாழைக்காய் தானம்.
3 வந்தால் பழம் ( ஏதேனும்) தானம்.
5 வந்தால் உப்பு தானம்.
7 வந்தால் எள் தானம்.
செய்த பின் அந்த காரியங்களை செய்யலாம்.
2You and Sudha Puranam
வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்:
ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்தி ரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்ன ங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்ற வற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங் களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய் ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.
ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தி யங்கள் அதிகரிக்கின்றன. அன்றாட வாழ்வில் அனைவ ரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறு வதில்லை.முயற்சிகள்தவறினாலும்,முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.
உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத் தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகை யில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன் படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில்
வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். அவற்றை பற்றிய தக வல்களை இங்கே காணலாம்.
நட்சத்திர குறியீடுகள்:
1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.
2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்
3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை
4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்
5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்
6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி
7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு
8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி
9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.
10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்
11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை
12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை
13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை
14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.
15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்
16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்
17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு
18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி
19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை
20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்
21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்
22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு
23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை
24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்
25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்
26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்
27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்.
Subscribe to:
Posts (Atom)