Wednesday, April 18, 2018

விளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

12 ராசிகளுக்குமான விளம்பி வருஷம் தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண்பீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச்சிக்குக் குறைவராது. மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டாக பாக்கியமுள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந்கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செயல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களும் எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும் செய்தொழிலில் புதகிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வெளியில் சொல்ல முடியாத உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். அசையா சொத்துக்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல்லும். நெடுநாளாக விலகியிருந்த உற்றார் உறவினர்கள் மறுபடியும் குடும்பத்ததுடன் இணைவார்கள். உங்களின் புதிய செயல்களுக்கு புதிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மேலும் சமூகத்தில் பிரபலமானவர்களும் நண்பர்களாவார்கள். வீடு மாற்றம் செய்ய நினைத்தவர்கள் இந்த காலகட்டத்தில் அதை செய்யலாம். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் தர்மகாரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பொதுச் சேவையில் முன்னேற்றங்கûள் உண்டாகலாம். அலைந்து திரிந்து செய்த காரியங்கள் சுலபமாக முடிவடையும். மற்றபடி அதிகமாக முயற்சி செய்யமலேயே சுகங்கள் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் மிகையாகாது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்கள் அனைத்தும் ராஜபாட்டையில் செல்ல விசா எதிர்பார்க்கின்றவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு பயணிப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருகளுக்கிடையே ஏற்பட்ட சிற்சில பிரச்னைகள் தானாகவே தீந்துவிடும். அதேநேரம் அனைவரிடமும் நிதானமாக பேசிப்பழகுவீர்கள். இதனால் உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் கூடத் தொடங்கும். உங்கள் செயல்களில் விழிப்புடன் இருந்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா செய்யவும். நெடு நாளாக ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள், பொருளாதாரத்தில் பற்றாக்குறை என்று எதுவும் ஏற்படாமல் இருக்கும் காலகட்டமாக இது அமையும் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலை குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கும். தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப்பிறகே வெற்றியைக் கொடுக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் பெரிய கடன்கள் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். வியாபாரிகளுக்கு கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். உபரி வருமானங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சிமேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்சதங்கள் கிடைக்கும். ஆனாலும் உங்களை குறைசொல்லும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். பணியில் கவனம் செலுத்தவும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று மன மகிழ்ச்சியைக் கூட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். பிள்ளைகளாலும் சந்தோஷம் நிறையும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்கள் தேவையான ஆதரவைத் தருவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்புகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

மிதுனம்(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை படிப்படியாக உயரத்தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது. அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனையின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும். இதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். விருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது. வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டாகும். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.
பரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள்.

கடகம்(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பம்போல் செய்தொழிலை மாற்றியமைப்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். சிலர் செய்தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். அவர்களால் குடும்பத்தின் அந்தஸ்து உயரும். பணவரவு எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே வரும். இல்லத்தில் சந்தான பாக்கியம் உண்டாகும் தீர்க்கமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுப்பீர்கள். உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய நவீன வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் இணைந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் எண்ணங்களை செய்தொழிலில் நடைமுறைப்படுத்துவீர்கள். அதனால் உண்டாகும் நற்பலன்களை கண்கூடாகவும் பார்ப்பீர்கள். கைவசம் உள்ள பொருள்களை செம்மைப்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பகைமை, விரோதம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் எதிர்வாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து மாற்றங்கள் உண்டாகி அதன்வழியே நல்ல செல்வம், செல்வாக்கு ஆகியவை பெறுவதற்கு வழி உண்டாகும். நெடுநாளாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் சுயமாக செயல்படத் தொடங்குவார்கள். தாமாகவே நல்ல முடிவுகள் எடுத்து சிறப்பாக வெற்றிபெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுலபமாக நடந்தேறிவிடும். மனதிற்கினிய பிரயாணங்களைச் செய்து அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இல்லத்தில் முத்தான புத்திரப் பேறு உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கும் புனிதமான தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கும் தகுந்த காலகட்டமாக அமைகிறது. வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். உங்களின் உள் உணர்வு சிறப்பாக வேலைசெய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். மேலும் உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபங்கள் வரும். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்பிவராமல் தங்கிவிட நேருமாகையால் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப் படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல்ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். உடல்சோர்வும் சில நேரங்களில் உண்டாகும். மாணவமணிகள் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்படையுங்கள்.
சிம்மம் மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சொல்லுமளவுக்கு லாபங்கள் கிடைக்கும். செய்தொழில் கணிசமாக விருத்தியடையும். பெற்றோர்களுடன் இணக்கமாக நடந்துகொண்டு அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வழக்கு விஷயங்கள் அனுகூலமான திருப்பங்களை சென்றடையும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்கள் சிறிது விரயமாகும் காலமிது. செலவுகள் செய்யும் நேரத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உற்றார், உறவினர்களுடன் சுமுகமான தொடர்பை வைத்துக்கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியம் மேம்பட  யோகா, பிராணாயாமம் செய்யவும்.  எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேருவீர்கள். பழைய தொழிலில் ஆதாயம் இல்லை என்று கருதி புதிய தொழிலையும் தொடங்குவீர்கள். திடீரென்று மகிழ்ச்சி தரும் உல்லாசப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரத்தையும் போடுவீர்கள். கடன்கள் அனைத்தையும் படிப்படியாக அடைத்து விடுவீர்கள். சிலருக்கு பங்குவர்த்தகத்தின் மூலமும் சிறிது கூடுதல் வருமானம் கிடைக்கும்.  உங்களுக்குக்கீழ் வேலைப் பார்ப்பவர்களுடன் உறவு சீராகவே தொடரும். குடும்பத்தில் முயற்சியின் பேரில் சுப காரியப் பேச்சுவார்த்தைகள் கூடிவரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள்.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எண்ணிய எண்ணங்களும் போடும் திட்டங்களும் கூட சில சமயம் நடைபெறவில்லை என்றாலும் சில நாள்கள் கழித்து பலன் தரக்கூடியதாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை சிறிது சிரமத்தின்பேரில் வாங்குவீர்கள். சுய கௌரவத்திற்காக மற்றவர்களை ஏவி காரிய சாதனை செய்து வந்த நீங்கள் தற்சமயம் தாமாகவே நேர்முகமாக காரியத்தில் காலடி எடுத்து வைத்து மாறுதலைச் சந்திப்பீர்கள்
வண்டி வாகனங்களுக்குப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். எந்த விஷயத்திலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தேக ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டி வரும். கண், தோல், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தைரியம் துணிவு இப்பொழுது சரிபாதிக்குமேல் குறைந்துவிட்டது போல் தோன்றும். அதனால் அவசரப்பட்டு எதையாவது பேசிவிட்டு பின்பு அதனால் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.
உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள். பணவரவு குறித்த நேரத்தில் கை வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகினாலும் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முதலீடுகளை கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்தப்பின்பு செய்யவும். வேகமாக விற்பனையாகும் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்குமென்பதால் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.  பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வழக்குகள் முடிய தாமதமாகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து சில பணிகளைக் கொடுக்கும். அவைகளை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டி வரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடனான உறவு சீர்படும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பாடங்களை முன்னதாகவே படித்து ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வரவும்

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒருமித்த ஒன்று போன்ற வரவேற்பையும் கொடுத்து அன்னியோன்யமாகப் பழகி நற்பெயர் எடுப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக ஏற்றுக்கொண்டு நடப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருந்தாலும் அனாவசியச் செயலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக குடும்பம் நடத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அரசாங்க தொடர்புகளில் கூடுமான வரையில் சாதகமான பலன்களும் சலுகைகளும் கிடைக்கும்
குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். நீண்ட காலமாக உடல் உபாதைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகி பூரண ஆரோக்கியம் பெறுவார்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறிச் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் மறைந்து சகஜ நிலை உருவாகும். இழந்த அளவுக்கு மீண்டும் பொருள் கை வந்து சேரும். கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் மளமளவென்று முடியும்.  உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். அயர்ச்சி, பலகீனம், இயலாமை, சோம்பல் போன்றவைகள் அனைத்தும் மாறி புத்துணர்ச்சியுடன் காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அசையாச் சொத்துகள் விஷயத்தில்  ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மேலும் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் தீர்ந்து விடும். உங்களின் ஆற்றலும் திறமையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடல்நலத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோர் உங்களுக்கு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும்.  மனதிற்கினிய ஆலய வழிபாடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் வேறு இடங்களுக்கு மாறிச் சென்று காரியமாற்றும் காலகட்டமிது
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள், குற்றமற்றவர் என்று நிரூபணமாகி வேலையில் சேர்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். கடன் பிரச்னையை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தையில் உங்கள் விளைபொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சமுதாய நோக்குடைய எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்பார்ப்புகள் அகலும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். புதிய பாணியில் திறமையை வெளிப் படுத்துவார்கள். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையை காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம்சிவபெருமானை வழிபட்டு வர சிறப்புகள் கூடும்.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். செய்தொழிலைச் செம்மையாக நடத்துவீர்கள். உங்களுக்குக்கீழ்  வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும்
வெளிவட்டாரத்தில் பரபரப்பாகச் செயலாற்றுவீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். மேலும் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். சிலர் சிறிதளவு முதலீடு செய்து பெரிய அளவுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.  பெற்றோர்களின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களுக்கு சிறிது மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றபடி நேரடியாகவோ மறைமுகமாகவே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் லாவகமாகச் சமாளித்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்திற்கு எந்தவிதக் குறைவும் இருக்காது. குடும்ப ஒற்றுமை நல்ல விதத்தில் காணப்படும்.  கூட்டாகத் தொழில் செய்தவர்கள் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு தனித்து செயல்படத் தொடங்குவார்கள். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் சிறிது தோக்கம் காணப்படுவதால் அவர்களை சற்று கூடுதலாக கவனிக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்பாளர்கள் உங்கள் காலை வாரிவிட திட்டமிடுவார்கள்
சமயோஜித புத்தியால் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தோரை அரவணைத்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பேச்சில் கண்ணியமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். சிலருக்கு திடீரென்று வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  சிலருக்கு வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகளும் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடம்பில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை முனைப்புடன் செய்வீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வர். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்
பொருளாதார வளம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். நீர் வளத்தால் உங்கள் எண்ணங்கள் பலிதமாகும். புதிய குத்தகைகளினால் லாபம் கொட்டும்.  வயல் நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். பால் வியாபாரத்தால் பலன் உண்டு.
அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மாற்று கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினரின் அனைத்து காரியங்களும் சுமுகமாகவே முடிவடையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார வசதி மேம்படும்
புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்
பரிகாரம்: ஸ்ரீ ராமரை ராமநாமத்தை ஜெபித்தபடி  வழிபடவும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களும் அனுகூலமாகவே முடியும். வருவாயும் வழக்கத்திற்கு மாறாகவே கூடுதலாக இருக்கும். தொழில் வழிச் சிந்தனையாளர்களை நன்கு செயல்படச் செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களுக்கென்று குடும்பத்திலும் வெளியிலும் ஒரு தனி மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள்
பொருளாதாரத்தில் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகும். சொல்லும் சொல் வாக்கு பலிதமுடையதாக இருக்கும். வசிக்கும் வீட்டை நவீனமயமாக்குவீர்கள். ஆன்மிகம் தத்துவம் போன்றவற்றில் மனதைச் செலுத்துவீர்கள். இடம் விட்டு இடம் மாறி செய்தொழிலைச் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூல சலுகைகள் தேடிவரும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது மனிதரின் தலையீட்டைத் தவிர்க்கவும். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சாதகமாக இராது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் இதுவரை நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து வந்த காரியங்கள் மனதிற்கு பிடித்தபடி முடிவடையும். மனதில் புதிய நம்பிக்கை உதயமாகும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகி விடும். உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்கள் எதுவும் வாங்க நேரிடாது. மனதில் இருந்த சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தோருக்கு  உபகாரங்கள் செய்தாலும் திருப்திபடுத்த முடியாது
தீவிர முயற்சியின் பேரில் கடன்வாங்கி புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பங்கள் கூடிவரும். வெளியிடத்திலிருந்து வர வேண்டிய பணநிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்தோரின் நட்பு கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். சிலர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது
உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சௌகரியங்களை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்களை உங்கள் நேர்ப்பார்வையில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தைப் பங்குபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள்
அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப் படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்கு பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மனநிம்மதி அடைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும். மாணவமணிகள் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்
பரிகாரம்வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.



தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
வருட ஆரம்பத்திலேயே ஜென்ம ராசியில் சனியும், செவ்வாயும் இருக்கிறார்கள். இந்த சேர்க்கை நல்ல சேர்க்கை இல்லை. சித்திரை 19-ல் செவ்வாயானவர் மகரத்துக்குப் பெயர்ந்துவிடுகிறார். இருப்பினும், இந்தக் குறுகியகாலத்திலேயே இருவரும் தன் சொந்த சுயரூபத்தைக் காட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்படக்கூடும். ஆகவே, வெளியில் வாகனங்களில் செல்லும்போதோ அல்லது ஆயுதங்களைக் கையாளும்போதோ எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதேபோல், இவர்களின் பார்வை 7-ம் வீட்டின் மேல் விழுவதால், களத்திரத்துடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இதை அனுசரித்து, விட்டுக்கொடுத்துச் செல்லுதல் நன்று
கேதுவானவர் 2-ம் வீட்டில். 2-ம் இடம் வாக்கு ஸ்தானம். அதில் கேது இருப்பது அவ்வளவு நல்லதல்ல; சமயங்களில் பிறறைக் காயப்படுத்திப் பேசச் சொல்லும். ஆகவே, நாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
இந்த ஆண்டு புரட்டாசி 25-ம் தேதி வரையிலும் குருவானவர் ராசிக்கு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆக, இந்த சஞ்சாரம் உங்களுக்கு நன்மை பயக்கக்கூடியது. பொதுவாக, பல நன்மைகளைப் பயக்கக்கூடியது. எடுத்த காரியங்களில் வெற்றி, சமூகத்தில் நல்ல மதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்
வருட ஆரம்பத்தில் சூரியன், சுக்கிரனை குருவானவர் தன் 7-ம் பார்வையால் பார்க்கிறார். ஆக, பெண்களுக்கு ஆடை, அணிகலன் சேர்க்கை அழகுப் பொருள்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படக்கூடும்
வைகாசி 25-ம் தேதி சுக்கிரனானவர் கடகத்துக்குப் பெயர்கிறார். ஆனி 20 முடிய கடகத்திலேயே இருக்கிறார். இந்தக் காலத்தில் சுக்கிரனுக்கு ராகுவின் சேர்க்கை மட்டும் இல்லாமல் செவ்வாய், கேதுவின் பார்வையும் கிட்டுகிறது. இருவரின் பார்வையும் நன்மை விளைவிப்பது அல்ல; கணவன் - மனைவி உறவில் விரிசல், சண்டைகள் ஏற்படக்கூடும். ஆகவே, நிதானத்தைக் கடைப்பிடித்து குடும்பத்தில் அமைதிக்கு வழிகோலுங்கள்
புரட்டாசி 25-ல் குருவானவர் 12-ம் வீட்டுக்கு வருகிறார். இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்தில் விரயங்களும், செலவுகளும், உடல்நலக் குறைவும் இருந்து வரும். முடிந்தால், அப்போது கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஆலங்குளத்துக்குச் சென்று குருவுக்குப் பரிகாரம் செய்துகொள்ளுதல் நன்மை பயக்கும். அங்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று குருவுக்குப் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
குரு 12-ம் வீட்டுக்கு வருவதால் சில நன்மைகளும் கிடைக்கும். 4-ம் வீடு, 6-ம் வீடு, 8-ம் வீடு ஆகிய இடங்களுக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. 4-ம் வீட்டுக்கு குரு பார்வை கிடைப்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது வெற்றிகரமாக முடியும்
தாயாருடன் யாருக்காவது பிணக்கு இருந்தால், அவை மறைந்து நல்லுறவு ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் மனக்கசப்புகள், மேலதிகாரிகளுடன் மனக்கசப்பு ஆகியவை இருந்தால், அவை  எல்லாம் மறைந்துவிடும். அதேபோல், கடன் தொல்லையால் கவலைப்பட்டு, அவதிப்பட்டு வந்தோருக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்
வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வணங்க மறக்காதீர்கள். அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று குரு காயத்ரியைச் சொல்லி வணங்கி வாருங்கள், பலன் கிட்டும்.
மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதங்கள்)
ஆண்டுத் துவக்கத்திலேயே ஜென்ம ராசியில் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் இருக்கிறார்கள். இது ஒரு சர்ப்ப தோஷம்தான். இந்தக் கிரக நிலை மாசி மாதம் 22-ம் தேதி முடிய நீடிக்கிறது. இதற்குப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. திருநாகேஸ்வரமோ, காளஹஸ்தியோ அல்லது கும்பகோணம் அருகிலுள்ள திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்துகொள்வது நல்லது
ராசியதிபதி சனி 12-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இவர் ஆண்டு முழுதும் தனுசிலேயே இருக்கிறார். 12-ம் இடம் என்பது புதிய இடத்தில், பழக்கமில்லாத இடத்தில் வசிப்பது என்றும் கொள்ளலாம். ஆகவே, தனிப்பட்ட ஜாதகத்தைப் பார்த்து கோச்சார ரீதியான இந்த நிலை, அதாவது புதிய இடத்தில் வாழும்படியான நிலை வருமா அல்லது வராதா எனத் தெரிந்துகொள்ளலாம்
சனியானவர் ராசியதிபதி மட்டுமல்ல; தனாதிபதியும்கூட. தனாதிபதி 12-ம் இடத்தில், அதாவது விரய ஸ்தானத்தில். ஆக, இந்த ஆண்டு விரயமான செலவுகள் இருக்குமென்று எதிர்பார்க்கலாம். 12-ம் இடம் விரயம் மட்டுமல்ல; IT IS A HOUSE OF INVESTMENT. ஆக, இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வார்கள் என்றும் கொள்ளலாம். ஆக, இந்த ராசிக்காரர்களுக்கு விரயச் செலவு இருக்குமா அல்லது பணம் முதலீடு செய்யப்படுமா என்பதை அவரவர்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ளமுடியும்
இந்த ராசிக்காரர்களுக்கு குருவானவர் 3 மற்றும் 12-ம் வீடுகளுக்கு அதிபதி. அவர் 10-ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார். மூன்று, பன்னிரண்டு வீடுகள் பயணத்தைக் குறிக்கின்றன. ஆக, இவர்களுக்கு இந்த ஆண்டு புரட்டாசி 25-ம் தேதி முடிய தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்
அடுத்து, இவர்கள் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது, தன ஸ்தானமான 2-ம் இடத்துக்கு குருவின் பார்வை இருக்கிறது. ஆக, பொதுவாக சரளமான பணப்புழக்கம் இருக்குமெனக் கொள்ளலாம். புரட்டாசி 25-க்குப் பிறகு குருவானவர் 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்குச் செல்கின்றார். அதாவது, இந்த ராசிக்காரர்கள் செய்யும் பயணங்கள் எல்லாம் இவர்களுக்கு அனுகூலத்தில் முடியும். அதாவது, இவர்கள் எந்த நோக்கத்துடன் பயணம் செய்கின்றார்களோ அந்த நோக்கம் நிறைவேறும்
அதேபோல், 7-ம் இடத்துக்கும் குருவின் பார்வை கிட்டுகிறது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண்களுக்கு அப்போது திருமணத்துக்கான யோகம் வருகிறது. 5-ம் இடமான புத்திர ஸ்தானத்துக்கும் குருவின் 7-ம் பார்வை கிட்டுகிறது. ஆக, மழலைச் செல்வத்தை எதிர்பார்க்கும் தம்பதியினருக்கும் காலம் அனுகூலமாக இருக்கிறது
பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் அனுகூலத்தையே அடைவார்கள். சித்திரை 19-ம் தேதியிலிருந்து ஐப்பசி 20-ம் தேதி முடிய, செவ்வாயானவர் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ஆகவே, அக்காலங்களில் உடலில் காயம், ரணம் போன்றவற்றுக்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது
இதே நேரத்தில், 4-ம் இடத்துக்கு செவ்வாய் பார்வை இருப்பதால், வீடு, வாசல் வாங்கும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்குக் கிடைக்கிறது

கும்பம் (அவிட்டம் 3,4-ம் பதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதங்கள்)
இந்த ஆண்டுத் தொடக்கத்தில், ராசியதிபதி சனி 11-ம் வீட்டில்; 2 மற்றும் 11-ம் வீட்டு அதிபதி குரு 9-ம் வீட்டில்; இவை முக்கியமான கிரக நிலைகள். ராசியதிபதி 11-ம் வீட்டில் இந்த ஆண்டு முழுதும் இருப்பது ஒரு நல்ல செய்திதான். எடுத்த காரியங்களில் வெற்றி; சுற்றம் மற்றும் நண்பர்கள் நடுவில் நன்மதிப்பு ஆகியவை கிட்டும். ராசியதிபதி சனியானவர் செவ்வாயுடன் சேர்ந்து இருப்பது ஒரு நல்ல அம்சம்தான். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். வெற்றி உங்களுக்கே!
சனியானவர் 11-ல் இருந்து ஜென்ம ராசி, 5-ம் இடம், மற்றும் 8-ம் இடத்தைப் பார்க்கிறார். 11-ல் இருந்து ஜென்மராசியைப் பார்ப்பதால் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 6-ம் வீட்டுக்கு உரிய சந்திரன் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் நாள்களில் மட்டும் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதுவும் நீர் சம்பந்தமான ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருக்கக் கூடும். மற்றபடி, தேக ஆரோக்கியத்துக்குக் குறைவில்லை
5-ம் இடம் புத்திர ஸ்தானம். 11-ல் இருந்து சனி பார்ப்பதால், சந்தான பாக்கியம் வேண்டுவோருக்கு அது கிடைக்கலாம். ஏற்கெனவே குழந்தைகள் இருப்போருக்கு, இது அவர்களுக்கு முன்னேற்றம் தரும் ஆண்டாக இருக்கும். 8-ம் இடத்துக்கு லாபஸ்தான சனியின் பார்வை இருப்பதால் அவர்கள் கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்கும்
அடுத்து, குருவின் கோள்சாரத்தைப் பார்ப்போம். 2 மற்றும் 11-க்கு உடைய குரு 9-ம் வீட்டில்; புரட்டாசி 25-ம் தேதி முடிய குருவானவர் 9-ம் வீட்டில் இருக்கிறார். ஆக, இந்த ராசிக்காரர்களுக்கு தகப்பனார் மூலம் ஆதாயம் கிட்டும். தகப்பனாருடன் சுமுகமான உறவு இல்லாதவர்களுக்கு, இந்த ஆண்டு அந்த உறவு மேம்பாடு அடையும்
உயர் கல்வியில் இருப்போருக்கு அவர்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். குரு ஜென்மராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு தெய்வ அனுகூலம் நிறையவே இருக்கிறது. 3-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் இளைய சகோதரத்துடனான உறவு மேம்படும். வெளியூர்ப் பயணங்களில் வெற்றியும், அனுகூலங்களும் வந்து சேரும். 5-ம் பாவத்துக்கும் குரு பார்வை இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு அவர்கள் ஆசைகள் நிறைவேறும்
புரட்டாசி 25-க்குப் பிறகு குருவானவர் 10-ம் பாவத்துக்குப் பெயர்கிறார். ஆக, வேலை தேடும் வேட்டையில் இருப்போருக்கு இந்தப் பெயர்ச்சி ஒரு அனுகூலமான பெயர்ச்சி; இந்த ராசி நேயர்களின் பொருளாதாரமும் மிகவும் சரளமாகவும், தாராளமாகவும் இருக்கிறது
ராகு, கேதுவின் நிலையைப் பார்க்கும்போது, ராகு 6-ம் வீட்டிலும் கேது 12-ம் வீட்டிலும் இருக்கிறார்கள். இந்த ஆண்டு மாசி மாதம் 22-ம் தேதி வரையிலும் இவர்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது. அதற்குப்பின்தான் அவர்கள் முறையே மிதுனத்துக்கும், தனுசுக்கும் பெயர்கிறார்கள். அதுவரையில் அவர்கள் நிலையில் மாறுதல் எதுவும் இல்லை. கேது 11-க்கு வந்த பிறகு நிலைமையில் முன்னேற்றம் காணப்படும்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிநாதன் குரு 8-ம் வீட்டில் காணப்படுகிறார். இதை குரு மறைந்துவிட்டார் என்று கூறுவார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. 8-ம் இடம் என்பது 7-ம் இடத்துக்கு, அதாவது களத்திர ஸ்தானத்துக்கு 2-ம் வீடு. அதாவது, வாழ்க்கைத் துணைவர் அல்லது வாழ்க்கைத் துணைவியின் தனஸ்தானம். அதில் குரு இருப்பது நல்லது அன்றோ. அதாவது, கணவன் அல்லது மனைவியின் பொருளாதாரம் நன்றாக இருக்கும்
திருமணம் ஆகப்போகும் ஆண் அல்லது பெண்ணுக்கு வரும் வாழ்க்கைத் துணையின் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 8-ம் இடத்திலுள்ள குரு இந்த ராசிக்காரரின் தனஸ்தானத்தியும் பார்க்கிறார். ஆக, இவரின் பொருளாதாரமும் நன்றாக இருக்கும். குருவானவர் இந்த ராசிக்காரரின் 4-ம் இடத்தையும் பார்க்கிறார். நான்காம் இடம் ஸ்திர சொத்தைக் குறிக்கிறது அல்லவா! 4-ம் வீட்டுக்கு செவ்வாயின் பார்வையும் இருக்கிறது. ஆக, செவ்வாய், குரு ஆகிய இருவரின் பார்வையும் இவர்களுக்கு ஸ்திர  சொத்து யோகத்தைக் கொடுக்கிறது
சித்திரை மதம் முழுவதும் 6-ம் வீட்டின் அதிபதியான சூரியன் 2-ம் இடத்தில் உச்சம். 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது அல்லவா? ஆக, வேலை தேடுவோருக்கு அது கிடைக்கக்கூடிய மாதமாக இது இருக்கிறது
புரட்டாசி 25-ம் தேதிக்குப் பிறகு, குருவானவர் 9-ம் வீட்டுக்குப் பெயர்கிறார். அங்கிருந்து ஜென்ம ராசியை குருவானவர் பார்க்கிறார். 5-ம் வீட்டையும் பார்க்கிறார். அப்போது சிலருக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் செய்யும் யோகம் வரும்
5-ம் இடத்தில் ராகு இருக்கிறார். இது சர்ப்ப தோஷம்தான். இதற்குப் பரிகாரமாக திருநாகேஸ்வரமோ, காளஹஸ்தியோ அல்லது திருப்பாம்புரமோ சென்று பரிகாரம் செய்துகொள்வது நன்மை பயக்கும்
இந்த ராசிக்காரர்களின் திருமண யோகம் பற்றிப் பார்ப்போம். புரட்டாசி 25-ம் தேதிக்குப் பிறகு, ராசிக்கு 9-ம் இடத்தில் குரு வருகிறார் எனப் பார்த்தோமல்லவா? அப்போது, குரு பார்வை இந்த ராசிக்காரர்களுக்குக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு, இந்த ஆண்டு முடியும் வரையிலும் திருமணத்துக்கு அனுகூலமான மாதங்கள்தான்
இந்த ராசிக்காரக்கள் சிலர் வியாபாரத்தில் இருப்பார்கள். வியாபாரத்தைக் குறிக்கும் வீடு 7-ம் வீடு. அதற்கு சனியின் பார்வை இந்த ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. ஆக, வியாபாரம் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்று மந்தமாகத்தான் இருக்கும்
இந்த ஆண்டுக் கடைசியில், உங்கள் உடல் நிலையில் சற்று பாதிப்புகள் ஏற்படும். ஆனால் கவலைப்படும்படியாக ஒன்றும் இருக்காது.

No comments:

Post a Comment