Friday, July 23, 2010

விவாக பொருத்தம்

விவாக தசவிதப் பொருத்தம்

1. தினப் பொருத்தம் : பெண் ஜென்ம நக்ஷத்திர முதல் ஆண் நக்ஷத்திரம் வரையில் எண்ணி 9 ஆல் வகுக்க மிச்சம் 2, 4, 6, 8, 9 ஆகில் உத்தமம். 1, 3, 5, 7 ஆகாது. பெண்ணுக்கு 7வது ஆண் நக்ஷத்திரம் - வதம்.

ஆணுக்கு 22 வது பெண் நக்ஷத்திரம் வைநாசிகம் கூடாது. பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, முலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, இவை 8ம் ஏக நக்ஷத்திரங்களாக வந்தால் விவாகம் செய்யக் கூடாது. சுபம்.

2. கணப் பொருத்தம் - தம்பதிகளிரண்டு பேருக்கும் ஒரே கணமானாலும், தேவ கணமும், மனுஷ கணமானாலும் உத்தமம். ஆண் ராக்ஷச கணமும், பெண் தேவ கணமுமானாலும் மத்திமம்.

ஸ்த்ரீ ராக்ஷ்ச கணமும், புருஷன் மனுஷ கணமும் ஆனால் விவாகம் செய்யக் கூடாது.

பெண் நக்ஷத்திரத்தில் இருந்து 14க்கு மேல் ஆண் நக்ஷத்திரம் இருந்தால், பெண் ராக்ஷச கணமும் ஆனாலும் தோஷமில்லை. விவாகம் செய்யலாம் என்பது சிலர் கருத்து.

3. மாஹேந்திர பொருத்தம்
ஸ்திரீ நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணிக் கண்டது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆகில் மாஹேந்திர பொருத்தம் உண்டு. தம்பதிகளுக்கு சம்பத்தை கொடுக்கும்.



4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்

ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு 13க்கு மேல் புருஷ நக்ஷத்திரம் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம். சிலர் 7க்கு மேற்பட்டால் உண்டு என்பர்.

5. யோனிப் பொருத்தம்

அசுவினி - சதயம் - குதிரை, பரணி - ரேவதி - யானை, கார்த்திகை - பூசம் - ஆடு, ரோகிணி - மிருகசீரிஷம் - பாம்பு, திருவாதிரை - முலம் - நாய், புனர்பூசம் - ஆயில்யம் - பூனை, மகம் - பூரம்- எலி, உத்திரம்- உத்திரட்டாதி - பசு, அஸ்தம் - சுவாதி - எருமை, சித்திரை - விசாகம் - புலி, அனுஷம் - கேட்டை - மான், பூராடம் - திருவோணம் - குரங்கு, உத்திராடம் - கீரி, அவிட்டம் - பூரட்டாதி - சிங்கம்.

ஆண் - பெண் நக்ஷத்திரப் பகை இல்லாவிடில் யோனிப் பொருத்தம் உண்டு.

முன் நக்ஷத்திரம் ஆண் மிருகமாகவும், பின் நக்ஷத்திரம் பெண் மிருகமாகவும் யோனியை அறியவும். குதிரை - எருமை, யானை-சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி- பூனை, கீரி - பாம்பு, மான் - நாய் இவைகள் ஒன்றுக்கொன்று பகை வைரங்கள். தம்பதிகளுக்கு ஏக ஜாதி யோனியானால் உத்தம். சுபம், வெவ்வேறு யோனியானால் மத்திமம். வைர ஜாதி யோனியானால் அதமம். நீக்கத் தக்கது.

6. ராசிப் பொருத்தம்(குடும்ப விருத்தி)

தம்பதிகள் ஒரே ராசியாயினும், ஒருவருக்கு ஒருவர் சமசத்தமாகினும் பெண் ராசிக்கு ஆண் ராசி 6க்கு மேற்படினும் உத்தமம், 3 - 4 மத்திமம். 2, 5, 6, 8 பொருந்தாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாகில் ஷஷ்டாஷ்டக தோஷமும் மற்ற ராசிகளாகில் 2 ஆம், 12ஆம் இடத்தோஷமுமில்லை என்பது சிலர் கருத்து.

7. ராசி அதிபதிப் பொருத்தம் (மக்கட்பேறு)

பெண் ராசி அதிபதிக்கு புருஷராசி அதிபதி ஒருவரானாலும், நட்பானாலும் உத்தமம். சமமானால் மத்திமம். பகை கூடாது. ஸ்திர ராசி யுக்ம ராசிகளாயிருந்தால் சுபம்.

8. வசியப் பொருத்தம்
மேஷம்=சிம்மம்–விருச்சிகம், ரிஷபம்=கடகம்–துலாம், மிதுனம்=கன்னி,
கடகம்=விருச்சிகம்–தனுசு, சிம்மம்=துலாம், கன்னி =மிதுனம்–மீனம்,
துலாம்=மகரம், விருச்சிகம்=கடகம், தனுசு=மீனம், மகரம்=மேஷம்-கும்பம், கும்பம்-மேஷம் & மீனம் – மகரம்.

இவைகள் வசியமாம், பெண் ராசிக்குப் புருஷ ராசி வஸ்யமாயினும் இருவர் ராசிகளும் ஒன்றாயினும் உத்தமம். புருஷ ராசிக்குப் பெண் ராசி வஸ்யமாகில் மத்திமம்.

9. ரஜ்ஜூப் பொருத்தம்
பாத – ஆரோ-அசுவனி, மகம், முலம்
ஏகரஜ்ஜூ - அவரோ - ஆயில்யம், கேட்டை, ரேவதி
ஊரு - ஆரோ - பரணி, பூரம், பூராடம்
ஏகரஜ்ஜூ - அவரோ - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நாபி - ஆரோ - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
ஏகரஜ்ஜூ -அவரோ - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
கண்ட - ஆரோ - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
ஏகரஜ்ஜூ - அவரோ - திருவாதிரை - சுவாதி - சதயம்
சிரோஜ்ஜூ - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

தம்பதிகளிரு நக்ஷத்திரமும் ஏக ரேகையில் கூடினால் ரஜ்ஜூ தட்டுகிறது. அப்படி ஏக ரஜ்ஜூவானால் ரஜ்ஜூ பொருத்தமில்லை.

பலன் - சிரோரஜ்ஜூ - புருஷ நாசம், கண்ட ரஜ்ஜூ - ஸ்திரீநாசம், நாபி ரஜ்ஜூ, ஸந்தான ஹானி, ஊருரஜ்ஜூ - தனநாசம், பாதரஜ்ஜூ - தேசாந்திரம் போவான், தம்பதிகளிருவர் நக்ஷத்திரங்களும் ஏக ரஜ்ஜூவல்லாமல் ஆரோக ரஜ்ஜூவானால் உத்தமம். அவரோக ரஜ்ஜூவாகில் ஸ்திரீநாசம், ஆரோகண அவரோகணமாகில் மிகவும் சுகத்தைக் கொடுக்கும், ஒரே ரஜ்ஜூவில்லாமல் இருப்பது அதிக நலம்.

வேதைப் பொருத்தம்
அசுவனி - கேட்டை, பரணி - அனுஷம், கார்த்திகை - விசாகம், ரோகிணி - சுவாதி, மிருகசீரிஷம் - சித்திரை- அவிட்டம், திருவாதிரை - திருவோணம், புனர்பூசம் - உத்திராடம், பூசம் - பூராடம், ஆயில்யம் - முலம், மகம் - ரேவதி, பூரம் - உத்திரட்டாதி, உத்திரம் - பூரட்டாதி, அஸ்தம்-சதயம் இவைகள் ஒன்றுக்கொன்று வேதையாம். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்முன்றுக்கும் பரஸ்பர வேதைகள் பொருந்தாது.

ஆண், பெண் நக்ஷத்திரங்கள் வேதையின்றி இருந்தால் பொருத்தம் உண்டு.

10 நாடிப் பொருத்தம்
பெண் நக்ஷத்திரம் முழு நாளானால் அசுவனி முதல் 3 பர்வத்திலே எண்ண வேணும். 3\4 நக்ஷத்திரமானால் கார்த்திகை முதல் 4, ரேகையிலே எண்ண வேணும் அர்த்த நக்ஷத்திரமானால் மிருகசீர்ஷ முதல் 5 பர்வத்திலே எண்ண வேணும். 2 நக்ஷத்திரங்களும் ஏக ரேகையில் கூடினால் நாடிப் பொருத்தமில்லை.

குறிப்பு - தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ இந்த 5ம் முக்கியம், பிராம்மணர்களுக்கு தினமும், க்ஷத்ரியர்களுக்கு கணமும், வைசியர்களுக்கு ராசியும், சூத்திரர்களுக்கு யோனியும் எல்லா ஜாதியாருக்கும் ரஜ்ஜூம் மிகவும் முக்கியம். இவற்றில் ரஜ்ஜூ உட்பட 5 பொருத்தங்களுக்கு மேல் இருந்தால் விவாகம் செய்யலாம

No comments:

Post a Comment