Wednesday, October 10, 2012

பித்ரு தோஷம்/ pithru dosha


                                                       What is pithru dosha?
Pithru means our ancestors who seek offerings in form of food and water from their sons. Pithru dosha arise when we do the following:

  1. Not doing shraadha or atleast tharpanam (offering in form of water mixed withs seasum seeds) during shan navathi thithis (96 tharpanams i.e. during amavasya,birth of months,vaidrithi,manvadhi,yugadhi,ardodaya,mahodaya,ashtaka,anvashtaka etc..) in a year.
  2. Not doing ashtaka and anvashtaka shraaddha.
  3. Not doing pithru tharpanam in brahma yagya daily.
  4. Not offering pinda (rice balls) in vaishvadeva homa daily.
  5. Not doing pinda pithru yagya during every amaavaasya.
  6. Not respecting our parents when they are alive and when we do not provide facilities and help them during their old age.
  7. Not doing their funeral rites for 12 days from death as mentioned in thedharma shastras.
  8. Not doing aupaasanam,agnihotra daily.
Above are the main reasons.There are also various other reasons to attain pithru dosha.
How can pitru dosham be rectified?
      1. By doing the above mentioned rites properly one can get rid off.
2. By doing thila homam with great care.
3. By donating thila do vedic brahmins generously.
4. By donating silver to vedic brahmins.

பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்துவைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்துவைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர்,அதிகாரத்திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.

     இந்த பிதுர்தோஷம், ஜாதகப்படி உங்களுக்கு 25 வயதில் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை 35 வயதில் (மிகத் தாமதமாக) கிடைக்கச் செய்யும். அல்லது 21 வயதில் செய்யவேண்டிய திருமணத்தை 31 வயதுக்கு மேல் செய்யுமளவுக்கு உக்கிரமாக செயல்பட வைக்கிறது.மனைவி,பெற்றோர்,குழந்தைகள்,உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.

       இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள்.
பித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.

       பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது. அரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அரசுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.கலியுகத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைக் கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்கள் ரொம்ப பிஸி!!!

      பிதுர் தோஷம் நீக்கிட உரிய ஜாதகர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் அல்லது துலா ஹோமம் செய்ய வேண்டும். நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக் கூடாது.சிரத்தையுடனும்,முழு மனதுடனும்,ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும்.அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணு நம்மை இந்த செயல் செய்தமைக்கு ஆசிர்வதித்தாக அர்த்தம்.

       வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்ய வேண்டும்.கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.

       கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டைப்பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர்.(நாமும் இப்படிச் செய்யலாம்)

      வாழ்வில் ஒருமுறையாவது காசி,கயா மற்றும் இராமேஸ்வரம் சென்று ஹோமம் செய்ய வேண்டும்.வயதில் மூத்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள்
உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

      பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.
      மகாளய பட்சம் என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமையிலிருந்து, அமாவாசை வரை வரும் பதினைந்து நாட்களாகும்.  இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

    மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

   திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.

வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

    தாய், தந்தை இல்லாதவர்கள்  மகாளய அமாவசை அன்று பித்ரு தர்பணம் செய்யவும்.எளியவர்களுக்கு தானம் கொடுக்கவும். அனைத்து பித்ரு தோஷங்களும் நீங்கும்.