இன்றைக்கு ஆங்கிலம் படிப்பதற்கு மிகவும் உதவுவது ஆங்கில மொழி அகராதிதான். டிக்ஷனரி என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
இதை உருவாக்கியவர் சாமுவேல் ஜான்சன் (இங்கிலாந்து). இவர்தான் தனது பெருமுயற்சியால் ஆங்கில மொழிச் சொற்களையெல்லாம் அகர வரிசையில் தொகுத்து அர்த்தம் சொல்லி முதலில் எழுதியவர்.
இந்த ஜான்சன் கல்லூரிப் படிப்பைக்கூட முழுவதுமாக முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர். காரணம் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட போதிய வசதியில்லாத குடும்பத்தில் பிறந்ததுதான்.
ஆனாலும் தனது முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் டிக்ஷனரி என்றவுடன் நினைவுக்கு வரும் பெயரை உருவாக்கிக் கொண்டவர்.
ஷேக்ஸ்பியர் காலத்தில் வெறும் 22,000 ஆங்கிலச் சொற்களே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று ஆங்கில மொழியில் எத்தனை சொற்கள் இருக்கின்றன தெரியுமா? 9,99,940 என்கிறார்கள். ஒவ்வொரு 98 நிமிடத்துக்கும் ஒரு புது ஆங்கில வார்த்தை சேருகிறது. ஆனாலும் ஆங்கில மொழி வல்லுநர்கள்கூட 14,000 ஆங்கில வார்த்தைகளுக்கு மேலே தங்களுடைய பேச்சில் பயன்படுத்தவில்லை இவ்வளவு எண்ணிக்கையில் சொற்கள் உள்ள மொழி உலகில் இல்லை.
ஏன் தெரியுமா?
பிறமொழிச் சொற்களை கெüரவம் பார்க்காமல் தன்வயப்படுத்தி சேர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் ஆங்கிலேயர்களுக்கு இருப்பதால்தான்!
Sunday, February 19, 2012
பெயர் தோன்றிய விதம்
ஆனியன்: கிரேக்க மொழியில் "ஆனியோ' என்றால் மிகப் பெரிய முத்து என்று பொருள். ஆனியோ தான் ஆங்கிலத்தில் "ஆனியன்' என்று ஆனது.
கொய்யா: "குயாயயே' என்ற மரத்தின் பழம் அமெரிக்கத் தீவுகளிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதுவே கொய்யாப்
பழமானது.
வெற்றிலை: மலேசியாவில்தான் வெற்றிலை முதன்முதலில் பயிர் செய்யப்பட்டது. வேற்று நாட்டு இலை என்பதால் அதை "வேற்று இலை' என்றார்கள். நாளடைவில் அதுவே வெற்றிலை ஆகியது.
வைரஸ்: "வைரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். இதிலிருந்துதான் நோயை உருவாக்கும் நச்சுக்கிருமிக்கு வைரஸ் என்ற பெயர் வந்தது.
அமீபா: கிரேக்க மொழியில் "அமீபா' என்றால் உருமாற்றம் என்று பொருள். அமீபாவுக்கு நிலையான, சீரான உருவம் இல்லை. அதன் உருவம் மாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அமீபா என்று பெயரிடப்பட்டது.
ஜிராஃபி: அரேபிய மொழியில் "ஜிராபோ' என்றால் நீண்ட கழுத்து என்று பொருள். இந்தச் சொல்லின் அடிப்படையில்தான் நீண்ட கழுத்தையுடைய ஒட்டகச் சிவிங்கியை "ஜிராஃபி' என்கிறோம்.
எஸ்கிமோ: எஸ்கிமோ என்ற சொல்லுக்கு மாமிசத்தை உண்பவர்கள் என்று பொருள். எஸ்கிமோக்கள் பச்சை மாமிசத்தையும் உண்ணக்கூடியவர்கள் என்பதால் இந்தப் பெயர்.
இமயமலை: "இமம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு பனி என்று பொருள். எப்போதும் இம்மலை பனி மூடிக் காட்சியளிப்பதால் இமயமலை என்ற பெயர் ஏற்பட்டது.
மீட்டர்: "மீட்டர்' என்ற சொல் பிரெஞ்சு மொழிச் சொல்லான "மீட்' என்பதிலிருந்து வந்ததாகும். மீட் என்றால் அளந்து எல்லையிடுதல் என்று பொருளாகும்.
ஏக்கர்: லத்தீன் மொழிச் சொல்லான "ஏகர்' என்பதற்கு ஒரு பகுதி நிலம் என்று பொருள். இந்த அடிப்படையிலிருந்துதான் ஏக்கர் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது.
பின் (குண்டூசி): லத்தீன் மொழியில் "ஸ்பின்னா' என்றால் கூரிய முனையுள்ளது என்று பொருள். இந்தச் சொல்லிலிருந்துதான் பின் என்ற சொல் உருவானது.

Saturday, February 18, 2012
சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா'
சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா': பட்டதாரி சாதனை:
சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.
நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.
இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.
(courtesy Dinamalar:08/02/2012)

மூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய மானுவல் சிகிச்சை
இன்றைய காலகட்டத்தில் உடலில் உண்டாகும் வலிக்கான காரணத்தைக் கண்டறிய நேரமில்லாமல் வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி நாம் தாற்காலிகத் தீர்வைத் தேடுகிறோம்.
இதனால் நிரந்தர வலி வர நாமே காரணமாகின்றோம். மூட்டு எலும்புத் தேய்மானம், தசைநார்கள் பலவீனம் வருவதற்கு மனச் சோர்வு, உடல் சோர்வு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மூட்டுத் தேய்மானம் காரணமாக முதுகுத் தண்டின் நடுவில் உள்ள வட்ட வடிவமான ஜவ்வு வெளியே வந்தும், தசை நார்கள் கிழிந்தும் தீராத வலி ஏற்படுகிறது. இதற்கு செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகூட நிரந்தரமான தீர்வல்ல என்கிறார்கள்.
ஆனால் அயல்நாடுகளில் பிரபலமாக உள்ள "மானுவல் தெரப்பி' எனும் சிகிச்சையை எளிதாக செய்து கொள்ளலாம். வெறும் கைகளின் துணைகொண்டு தீர்வு காணமுடியும்.
எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் வலிக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து வலுவிழந்த தசை நார்களை வலுப்படுத்ததவும், வெளியே வந்துவட்ட ஜவ்வை அதன் சாதாரண நிலைக்குக் கொண்டு சேர்க்கவும், எங்கள் கைகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் முறைப்படுத்தி சிகிச்சை செய்யப்படுகிறது.
நோயாளிகள் தாங்களே செய்து கொள்ளுமாறு, சில எளிய பயிற்சிகளும் உள்ளன. நோயாளிகளின் வலியைப் பொருத்தே, சிகிச்சையின் நேரமும், கால அவகாசமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
"மானுவல் தெரப்பி' சிகிச்சை முறை பிசியோதெரப்பி சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டது. எந்தவித மருந்துகளையும் கொடுப்பதில்லை. எளிமையான மிகக் குறைந்த செலவிலான இந்த சிகிச்சை முறையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு,
உயர் ரத்த அழுத்த நோய்-சர்க்கரை நோய் போன்ற நோய்களிலிருந்து குணம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு...
டாக்டர் வேம்பன் சிவகுமார்,
"ஸ்பைன் அண்ட் பெயின் கேர் கிளினிக்',
சென்னை.
செல்பேசி: 9840303156, 9600190001
(Courtesy Dinamani Tamil Daily magazine dated 19/02/2012)

சூரிய சக்தி மின்சாரம்(Solar Electric)
சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்யப்படுகையில் எரிபொருள் மிச்சமாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மின்கட்டணம் கட்டத் தேவையில்லை. பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ஆயுட்காலம் வரை வேறு பணச்செலவு இல்லை.
அவர்களின் வாகனத்தில் சோலார் குக்கர், சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெருவிளக்கு, வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை சேமிப்பதற்கான சோலார் மேற்கூரை, சாண எரிவாயு அடுப்பு என வகை வகையான சோலார் தொடர்பான மின் உபகரணங்கள் இருந்தன.
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரையிலான மின்சார சேமிப்பு வாரத்தை முன்னிட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்த "டெடா' அமைப்பின் விரிவாக்க மேலாளர் எஸ்.இ.வெங்கட்ராமன்.
நடமாடும் கண்காட்சி வாகனம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10 மாவட்டங்களில் சூரியசக்தியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பேரணிகள் மூலமாகவும் கருத்தரங்குகள் மூலமாகவும் விளக்குகிறோம். இதற்கு மாணவ, மாணவியர் பயன்படுகிறார்கள். அதிக செலவில்லாமல் சூரிய சக்தியைச் சேமித்து அதை நம் தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும். மின் பற்றாக்குறை உள்ள எந்த நேரத்திலும் கூட சூரியசக்தியைப் பயன்படுத்தி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம். இதற்கென்று பல சோலார் உபகரணங்கள் இன்று விற்பனைக்கு வந்து விட்டன.
சூரிய அடுப்பு (சோலார் குக்கர்)
ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் மட்டும் சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு சோலார் அடுப்பின் விலை ரூ.3000. சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் இல்லாமல் சோலார் குக்கரில் பொருட்களை வைத்து சமைத்துக் கொள்ளலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. மின்சாரமும் மிச்சமாகும்.
சோலார் வாட்டர் ஹீட்டர்
மின்சாரத்தின் உபயோகமின்றி தண்ணீரை சுட வைத்துக் கொள்ளலாம். மழைக்காலங்களில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முக்கியமாக பொறியியல் கல்லூரிகளின் விடுதிகளிலும் அதிக அளவில் பயன்பட்டு வருகிறது.
சோலார் தெருவிளக்கு
சூரியன் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டு இரவு முழுவதும் எரியும் தன்மையுடையது. பள்ளி, கல்லூரிகளிலும் இதை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். கிராமங்களில் இப்போதுதான் இதுகுறித்து விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவர்கள் இதை கிராமங்களில் அமல்படுத்தினால் இருளே இல்லாத கிராமமாக இருக்கும். செலவும் குறைவு.
சோலார் மேற்கூரை
தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின் மோட்டார்கள் உட்பட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் இதன் மூலம் எரிய வைக்கலாம். கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதில் உள்ள பேட்டரி சூரிய சக்தி மூலமாக சார்ஜ் ஆகி இன்வெர்ட்டர் மூலமாக டி.சி. சப்ளையை ஏ.சி. சப்ளையாக மாற்றித் தரும் சாதனம். மின் பற்றாக்குறை காரணமாக, இதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் நிறுவியுள்ளனர். திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
சோலார் லாந்தர் விளக்கு
இதை டார்ச் லைட் மாதிரி உபயோகித்துக் கொள்ளலாம். சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து இதனை சார்ஜ் செய்து கொண்டும் பயன்படுத்த முடியும். தற்போது இந்த உபகரணமும் அதிகமாக விற்பனையாகத் தொடங்கியிருக்கிறது.
சாண எரிவாயு அடுப்பு
பழக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், வீணான உணவுக் கழிவுகள், மாட்டுச்சாணம் மற்றும் மனிதக் கழிவுகள் இவற்றை பூமிக்கடியில் உள்ள கழிவுத்தொட்டி ஒன்றில் கொட்டி 15 நாட்கள் ஆன பிறகு அதிலிருந்து உருவாகும் மீத்தேன் என்ற வாயுவை பைப் மூலமாக சமையல் செய்யப் பயன்படுத்துவதே சாண எரிவாயு அடுப்பாகும். குறைந்தது 4 மாடுகள் இருந்தால் கூட அதன் சாணத்தின் மூலம் எரிவாயுவை உற்பத்தி செய்து அதன் மூலமும் மின்சாரம் எடுக்க முடியும்.
பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள விடுதிகளில் சாண எரிவாயு அடுப்பைத்தான் பயன்படுத்துகின்றனர். பல லட்சங்கள் மின் கட்டணம் இவர்களுக்கு மிச்சமாகிறது.
ஒவ்வொருவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கத் தொடங்கிவிட்டால் அரசுக்குப் பல கோடி தானாகவே மிச்சமாகிவிடும். தனியாரிடம் மின்சாரத்திற்காக கையேந்த வேண்டிய அவசியமும் இருக்காது. சோலார் தொடர்பான எந்தப் பொருளும் இன்று பல கடைகளில் விற்பனையாகும் வகையில் உற்பத்தியாளர்களும் பெருகிவிட்டனர். நம் வசதிக்குத் தக்கவாறு தேவையான பொருளை வாங்கிக் கொள்ளலாம். இவற்றைப் பயன்படுத்திட பழகிக் கொண்டால் மின்சாரம் மிச்சமாகும். மின் தடை பற்றியோ, மின் கட்டணம் அதிகமாகி விட்டது என்றோ கவலைப்படத் தேவையில்லை. பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால், குடும்பத்திற்கு எவ்வளவு நல்லதோ அதைப்போல மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் நாட்டுக்கு நல்லது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம். இயற்கை நமக்கு வாரி வழங்கிய பரிசு தான் சூரியசக்தி; அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்" என்றார்.

Wednesday, February 15, 2012
நம் வரலாறு
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!PLS SHARE !!!!
Subscribe to:
Posts (Atom)